LATEST NEWS
பாடகர் எஸ்.பி.பி-யின் மகளை பார்த்துள்ளீர்களா?…. விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி பாடவராக கொடி கட்டி பறந்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் பாடிய அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. இவரின் பாட்டுக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் அடிமை. பின்னணி பாடகர் மற்றும் நடிகராக திகழ்ந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக செப்டம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி தொடங்கி தற்போதுள்ள அஜித் மற்றும் விஜய் வரை பல திரைப்படங்களில் இவர் பாடல் பாடியுள்ளார். இவர் இறுதியாக ரஜினியின் பேட்டை திரைப்படத்தில் மரண மாஸ் என்ற பாடலை பாடியிருந்தார். இவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் இவரின் பாடல்கள் என்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மகன் எஸ்பி சரண் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் பாடகர், தயாரிப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகள் இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது. தற்போது அவர் முதன் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.