LATEST NEWS
அந்த இடத்தில் திரிஷா குத்தியுள்ள டாட்டூவை பார்த்துள்ளீர்களா?…. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டாப் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் திரிஷா.
இந்நிலையில் திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள ராங்கி திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் திரிஷா இடது கையில் குத்தியுள்ள டாட்டூ தெரிகின்றது. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.