LATEST NEWS
சிம்புவின் பத்து தல திரைப்படத்தின்…. இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான்.
அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது.
இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சிம்பு ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதற்காக தாய்லாந்தில் இருந்து நடிகர் சிம்பு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான உண்மை சம்பவங்களை பகிர்ந்த சிம்பு, இனி தனது ரசிகர்களை தலைகுனிய விட மாட்டேன் என்று கூறினார்.
ரசிகர்கள் இனி எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். நான் தமிழ் சினிமா, தமிழ் மக்கள் பெருமைப்படும் அளவிற்கு நிச்சயம் வருவேன்.
இனி எப்படி நான் வருகிறேன் என்பதை மட்டும் பாருங்கள் என உணர்ச்சிபூர்வமாக பேசினார். முன்பு உடல் எடை அதிகரிப்பு காரணமாக சிம்பு பல கேலி கிண்டலுக்கு ஆளானார்.