அய்யயோ.. குப்பை லாரியின் அடியில் சிக்கிய 10 வயது சிறுமி.. . சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யயோ.. குப்பை லாரியின் அடியில் சிக்கிய 10 வயது சிறுமி.. . சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!

Published

on

மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு வளாகத்திற்குள் , நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனம் மோதி 10 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் மாங்லியா பைபாஸ் பகுதியில் உள்ள ‘பியூமார்த்து செரினிட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் திங்கள்கிழமை மாலை இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சாலையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் திரும்பிய குப்பை லாரியின் முன் சக்கரம் சிறுமியின் காலின் மீது ஏறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. பலத்த காயமடைந்த அச்சிறுமி தற்போது அங்குள்ள பாம்பே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஒரு மூடிய குடியிருப்பு வளாகத்தின் உட்புறச் சாலையில், இது போன்ற கனரகக் குப்பை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது அங்கிருக்கும் குடியிருப்பாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெளியில் இருந்து வரும் வாகனங்களை முறைப்படுத்தவும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கவும் இத்தகைய குடியிருப்புகளில் தீவிரக் கட்டுப்பாடுகளும் பாதுகாப்புக் காவலர்களும் இருப்பார்கள். அவ்வாறிருக்கையில், குழந்தைகள் விளையாடும் குடியிருப்புப் பகுதிக்குள் குப்பை வாகனங்களை எவ்வித வழிகாட்டுதலும், வேகக் கட்டுப்பாடும் இன்றி அனுமதித்தது நிர்வாகத்தின் அப்பட்டமான அலட்சியம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைகளைச் சேகரிக்கும் இடத்தை ஏதேனும் ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக அமைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும், ஓட்டுநரின் அஜாக்கிரதையான செயல்பாட்டிற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in