CRIME
“நீதி கிடைக்கும் வரை நகர மாட்டேன்..” 4 வருடமாக ஏமாற்றிய கணவன்.. புகுந்த வீட்டு கேட்டின் முன் அமர்ந்து இளம்பெண் அதிரடி தர்ணா.. வைரலாகும் கண்ணீர் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் வாரங்கலின் சிவனகர் பகுதியில், லண்டனில் வேலை இருப்பதாகக் கூறி ஏமாற்றித் திருமணம் செய்துவிட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாகக் காணாமல் போன கணவனுக்கு எதிராக, அவரது வீட்டின் வாசலிலேயே மனைவி திவ்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவன் குமார் என்ற நபர் தன்னைத் திருமணம் செய்துகொண்டு, பின்னர் எவ்விதத் தடயமும் இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ளதாகத் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சிவனகரில் உள்ள தனது புகுந்த வீட்டின் நுழைவாயில் கதவின் முன்பாகத் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து திவ்யா இந்தத் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
தனக்கு நீதி கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு நகரப் போவதில்லை எனத் திவ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் மாமனார் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மில்ஸ் காலனி போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், இது தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கணவர் பவன் குமார் குறித்தும், புகுந்த வீட்டினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
