“இனி நீ வாழவே கூடாது!”.. விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மனைவியையும் மகனையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்..  நடுங்க வைக்கும் பகீர் பின்னணி.!! – cinefeeds
Connect with us

CRIME

“இனி நீ வாழவே கூடாது!”.. விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மனைவியையும் மகனையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்..  நடுங்க வைக்கும் பகீர் பின்னணி.!!

Published

on

கேரள மாநிலம் த்ரிச்சூர் மாவட்டம் வலாப்பாடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் 4 வயது மகனையும் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது. விஜேஷ் (44) என்பவருக்கும் அவரது மனைவி விஸ்மயாவுக்கும் (24) இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக, விஸ்மயா கடந்த சில மாதங்களாகத் தன் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்ததுடன் விவாகரத்து பெறுவது குறித்தும் ஆலோசித்து வந்துள்ளார்.

ஆனால், இதற்கு விஜேஷ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவ நாளன்று விஸ்மயாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த விஜேஷ், விஸ்மயாவையும் அவர்களது 4 வயது மகனையும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in