LATEST NEWS
என் அப்பாவிற்க்கு கூட நான் இதை செய்யல…. இந்த நடிகருக்கு செய்தேன்… உண்மை உடைத்த சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடந்தால், சிரித்தால், பேசினார் எதையும் வெறித்தனமாக ரசித்துப் பார்க்கும் கூட்டம் இருந்து கொண்டு தான் வருகிறது. இவரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு சினிமாவுக்குள் வந்தவர்கள் ஏராளம். தற்போது இவர் கிங்காக இருக்கலாம், ஆனால் அவர் தன்னுடைய ஆரம்பகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். அவமானப்பட்டிருக்கிறார்.
பாடலாசிரியர் வைரமுத்து ரஜினிக்காக படையப்பாவில் எழுதியது போல் ‘வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் அப்பா தடை கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா’ என்று அதில் ஏறி வந்தவர். சமீபத்தில் டிரைலர் ஜெயிலர் படத்துக்காக கலாநிதி மாறன் வழங்கிய காரை வாங்கிவிட்டு படத்தின் வெற்றி விழாவில் பேசியபோதுகூட, இப்போதுதான் நான் பணக்காரனாக உணர்கிறேன் என்றார். ஏனெனில் தயாரிப்பு நிறுவனத்தின் காரில் செல்வதற்குக்கூட அவர் உச்சக்கட்ட அவமானத்தை சந்தித்திருக்கிறார்.
நடிகரை ரஜினிகாந்த் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு அவர் உழைப்பு ,திறமை தான் காரணம் அதே போல் தனது துறையில் இருந்த, இருக்கும் மூத்தவர்களை தவறாமல் மதிப்பது. அப்படி அவர் மதித்தவர்களில் ஒருவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் படையப்பா படத்தில் நடித்ததற்காக முதல் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார். தற்போது தனது தந்தைக்காகக்கூட செய்யாத செயலை சிவாஜிக்காக ரஜினி செய்தது தெரியவந்திருக்கிறது.
ஒருமுறை ரஜினிகாந்த்தை அழைத்த சிவாஜி கணேசன், ஏன் டா அப்பா இறந்துட்டா என்னுடைய உடம்போடு சுடுகாடு வரைக்கும் வருவியா டா’ என கேட்டாராம். அதற்கு ரஜினியோ, அய்யோ அப்பா ஏன் இப்படி கேட்குறீங்க என்று பதறினாராம். அதற்கு சிவாஜி டேய் வயசு ஆகிடுச்சு எப்ப வேணாலும் நடக்கலாம். நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு.என் உடம்போட வருவியா? ஏனா நீதான் இங்க இருக்கவே மாட்றியே.அமெரிக்கா, லண்டன், இமயமலைனு சுத்திட்டே இருக்கியே என்று சொன்னாராம்.
அதற்கு ரஜினிகாந்த்தோ கண்டிப்பாக வருவேன் என்று சொல்லியிருக்கிறார். சில காலத்திலேயே சிவாஜி கணேசன் இறந்த பிறகு அவருடைய உடல் வைத்திருந்த ஊர்தியில் அமர்ந்து மின் மயானம் வரை சென்று இருந்ததாக ரஜினி கூறியிருந்தார். இதைக் கூட என் தந்தைக்கு செய்ததில்லை என்று மேடையில் பகிர்ந்து கொண்டார்.