LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர் சீசன் 2வில் … நடிக்க ஒப்பந்தமாகியுள்ள… இளையராஜா மருமகள்…!

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாகும். ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள இந்த சீரியல் இன்னும் ஓரிரு நாட்களில் முடியப்போகிறது. இதில் சகோதர பாசம், கூட்டுக்குடும்பம், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை என இன்றைய பல தேவைகளை குறிப்பிடுமாறு ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்த சீரியல் முடிவடையும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வரும் அக்டோபர் 30ம் தேதி தொடங்க உள்ளது. தற்பொழுது சீசன் 2 சீரியலின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதில் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்துவுடன் நிரோஷா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை விலாசினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் பாண்டியனின் மூத்த மகளாக விலாசினி நடிக்கவுள்ளதாக அறியப்படுகிறது. இந்நிலையில் இந்த சீரியலுக்கு முன்பு விலாசினி ஜீ தமிழில் ‘தவமாய் தவமிருந்து’ சீரியலில் மார்க்கண்டேயனின் மகளாக நடித்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றார். ‘தவமை தவமிருந்து’ சீரியல் சமீப காலத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து தான் தற்பொழுது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 இல் நடிக்கவுள்ளார்.
மேலும் நடிப்பு மட்டுமின்றி, பாடகியும், டப்பிங் கலைஞருமான விலாசினி, இசையமைப்பாளர் இளையராஜாவின் உறவினர் மற்றும் அவரது மருமகள் ஆவார். சினிமாவில் பாட வாய்ப்புக்காக அலைந்ததாகவும் அதில் எந்த பயனும் இல்லாததால் தான் சீரியலில் நடிக்க வந்ததாகவும், தனது இக்கட்டான நிலையில் எவரும் உதவி செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.