LATEST NEWS
பார்பியாக சித்தரிக்கப்பட்ட கோலிவுட் நடிகைகள்… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளாக சேர்ந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். அப்படி சினிமாவில் இருக்கும் நடிகைகளை ரசிகர்கள் பலரும் அதிக அளவு கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் புகைப்படங்கள் அடிக்கடி பகிரப்படுவது வழக்கம். அதன்படி தற்போது வித்தியாசமாக நடிகைகளை பார்பியாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சுருதிஹாசன்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகள்தான் சுருதிஹாசன். இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஸ்ருதிஹாசன் சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தமன்னா:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
திரிஷா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா பல வருடங்களுக்கு பிறகு தற்போது விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தற்போது திரிஷா நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமந்தா:
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா அடுத்தடுத்து பான் இந்தியா திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிட்டாடல் இந்தியா என்ற தொடரில் நடித்து முடித்துள்ள நிலையில் அது விரைவில் வெளியாக உள்ளது. அதே சமயம் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது சினிமாவிற்கு இடைவெளி விட்டு தற்போது சுற்றுலா சென்றுள்ளார்.
காஜல் அகர்வால்:
கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு காஜல் அகர்வால் தற்போது ரி என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
நயன்தாரா:
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ள நிலையில் பிசியாக நடித்து வரும் இவர் தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
