LATEST NEWS
பட வாய்ப்புக்காக இப்படியா?…. திடீரென கிளாமர் ரூட்டுக்கு மாறிய பொன்னியின் செல்வன் பூங்குழலி…. வைரலாகும் ஹாட் போட்டோ ஷூட்….!!!!

உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான படைப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.மலையாள நடிகையான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாககவர்ந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்தில் பத்திரிக்கையாளராக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து அசத்தியிருந்தார்.
அதே சமயம் அந்த திரைப்படத்தை அவர் தயாரித்தும் இருந்தார். இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவரின் நடிப்புக்கு பல பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அவர் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க