LATEST NEWS
யுவனை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் மகன்.. ஹீரோ இந்த பிரபல நடிகரா..? எகிறும் எதிர்பார்ப்பு..!!

சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். விஜய்க்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர்.
இதில் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் பட இயக்கம் சார்ந்த படிப்பை முடித்துள்ளார். படிப்பு முடிந்ததும் ஊருக்கு வந்த சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க தயாரானார். ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. கூடிய விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் நிலையில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முதல் படத்திலேயே பெரிய நட்சத்திர பட்டாளத்தை உள்ளடக்கிய சஞ்சய்க்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.