LATEST NEWS
குழந்தையுடன் திருமண நாளை கொண்டாடிய சீரியல் பிரபலம் கண்மணி – நவீன் குமார் தம்பதி…. வெளியான புகைப்படங்கள்…!!!
சின்னத்திரை செய்தி வாசிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் கண்மணி சேகர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்த நடிகர் நவீனை காதலித்து கடந்த வருடம் கண்மணி சேகர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண புகைப்படங்களும் தேன்நிலவு கொண்டாடிய புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்மணி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்.
அவர்கள் முதல் குழந்தையை பெற போவதாக முன்பே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது கண்மணிக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கண்மணிக்கு சமீபத்தில் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கண்மணி மற்றும் நவீன் குமார் தம்பதி தங்களின் திருமண நாளை குழந்தையுடன் கொண்டாடியுள்ளனர்.
அந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
