LATEST NEWS
குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா சென்ற குஷ்பூ…. ஒருத்தர் மட்டும் மிஸ்ஸிங்…. என்ன காரணம் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை.
இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பூ சமீப காலமாக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை வியக்கும் படியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் அவரின் ஒரு மகள் மட்டும் இல்லை. அவர் வேலையில் பிஸியாக இருப்பதால் வரவில்லை என்று குஷ்பு தெரிவித்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க