LATEST NEWS
“இது வேற லெவல்”… பார்பியாக சித்தரிக்கப்பட்ட கோலிவுட் நடிகர்கள்… போட்டோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். அப்படி சினிமாவில் இருக்கும் நடிகர்களை ரசிகர்கள் அதிக அளவு கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நடிகர்களின் புகைப்படங்கள் அடிக்கடி பகிரப்படுவது வழக்கம். அதன்படி தற்போது வித்தியாசமாக நடிகர்களை பார்பியாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன்:
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கிய இன்று வரை முன்னணி நடிகராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் விரைவில் இவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொடங்க உள்ளது.
சிவகார்த்திகேயன்:
மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது பலருக்கும் விருப்பமான நடிகராக மாறிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது.
நடிகர் சூர்யா:
தன்னுடைய தந்தை சிவகுமார் போலவே தமிழ் திரை உலகிற்கு வித்தியாசமான கதைக்களத்துடன் பல திரைப்படங்களில் நடித்து வரும் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
விஜய்:
இளைய தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அஜித்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்திற்காக அஜித் தயாராகி வருகிறார். அதேசமயம் சமீபத்தில் இவர் பைக் ரைடு சென்ற புகைப்படங்களும் வெளியானது.
விக்ரம்:
சினிமாவில் கதை களத்திற்கு ஏற்றவாறு தன்னை மெருகேற்றிக் கொண்டு நடிப்பதில் வல்லவர் விக்ரம். இவரின் நடிப்பில் தற்போது தங்களான் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் படபிடிப்பு முடிவடைந்து திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தனுஷ்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சிம்பு:
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான 10 தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் குறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ரஜினி:
90களில் தொடங்கி இன்று வரை சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினியின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.