CRIME
அடப்பாவி..! சிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அநாகரீகம்… கடைசியில் முகத்தில் மை பூசி தர்மஅடி கொடுத்த மக்கள்… சட்டப்பேரவை உணவக ஊழியரின் கொடூர செயல்..!!
உத்தரகாண்ட மாநிலம் டேராடூனின் நேரு காலனி பகுதியில் சிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த ஜிதேந்திரா என்ற நந்து மஹாராஜ், சட்டப்பேரவை உணவகத்தில் பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதி சிறுவர்களுக்குக் குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதோடு, அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அச்சிறுவர்களை மிரட்டி பிளாக்மெயில் செய்து வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக நந்துவின் மிரட்டல் மற்றும் பயம் காரணமாக இதுகுறித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் எதுவும் கூற முடியாமல் சிறுவர்கள் அமைதி காத்து வந்தனர். இதனால் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இருந்த குழந்தைகள் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், அப்பகுதி மக்கள் கொதித்தெழுந்தனர். குற்றவாளியைப் பிடித்த பொதுமக்கள், அவரது முகத்தில் கருப்பு மை பூசி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தகுந்த பாடம் புகட்டினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் நேரு காலனி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளியைக் கைது செய்தனர். நந்து மீது போக்சோ சட்டம் மற்றும் பிற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்த மொபைல் போன் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
