LATEST NEWS
“திடீர் உடல்நலக்குறைவு..! தீவிர சிகிச்சை பிரிவில் மூத்த தலைவர் அத்வானி… பதற்றத்தில் தொண்டர்கள்..!!”
பாஜக மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது.
