CRIME
“ஆழமான பள்ளத்தாக்கு… அலறிய காதலி..” புனே சம்பவத்தை அச்சு அசலாக மாற்றிய காதலனின் கொடூர வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், லோஹாகாட் கோட்டையிலிருந்து காதலி சியா தனது காதலன் கேதனைத் தள்ளிவிட்டுக் கொன்ற சம்பவத்தைப் போன்றே, மற்றொரு கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், காதலன் தனது 23 வயதுடைய காதலியைப் பயங்கரமான ஆழமான பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தத் துயரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த அதிர்வலையை ஏற்படுத்திய கொலைக் வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் புனேவில் நடந்த கேதன் கொலை வழக்கில் காதலி குற்றவாளியாக இருந்த நிலையில், இந்த வழக்கில் காதலனே கொலையாளியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு அல்லது சந்தேகத்தின் காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், காதலியின் உடலைக் கைப்பற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கொலையாளியான காதலனைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
