CINEMA
“தங்கலான்” படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி…. செம குஷியில் ரசிகர்கள்…!!

ரூ.10 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில், படம் வெளியாகும் முன்பாக ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி 1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ‘தங்கலான்’ படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை.