LATEST NEWS
அருண் விஜயின் மாஃபிய 3 நாள் வசூல் இவ்ளோவா , இன்னும் வெற்றிக்கு இத்தனை கோடிகள் தான் தேவை! – விவரம் இதோ

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான மாஃபியா திரைபடம் மாஸ் வெற்றியாக திரைஅரங்குகளில் வசூல் வேட்டை ஆடிவருகிறது.
இந்நிலையில் திரையிடப்பட்ட முதல் நாளே இப்படம் ரூ 2.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது, இது தான் அருண்விஜய் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து மாஃபியா 3 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளாதாக கூறப்படுகின்றது.
இவை மிகப்பெரிய ஓப்பனிங் தானாம், மேலும், இன்னும் இப்படத்தின் வெற்றிக்கும் ரூ 5 கோடி தான் தேவை என்று கூறப்படுகிறது.
மேலும், இத்திரைப்படம் தலைநகர் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 1.2 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் எவ்வளவு கோடி வேட்டையாடும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.