CINEMA
ஆந்திராவில் பதுங்கி இருக்கும் மனோகரின் மகன்கள்…. செல்போன் சிக்னலை வைத்து தேடும் போலீசார்…!!

குடிபோதையில் சிறுவர் உள்பட இருவரை பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து செல்போன் சிக்னலை கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.