ஒரு தேசத்தையே உலுக்கிய 87 வயது மூதாட்டி..! ஸ்பெயின் மக்கள் போராட்டத்தின் சின்னம் ‘மரியா கார்மென்’ காலமானார்.. கண்ணீரில் மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு தேசத்தையே உலுக்கிய 87 வயது மூதாட்டி..! ஸ்பெயின் மக்கள் போராட்டத்தின் சின்னம் ‘மரியா கார்மென்’ காலமானார்.. கண்ணீரில் மக்கள்..!!

Published

on

ஸ்பெயினில் வீடுகள் பற்றாக்குறை மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து நடந்த மக்கள் போராட்டத்தின் அடையாளமாக மாறிய 87 வயது மூதாட்டி மரியா கார்மென் அபாஸ்கல் (Mari Carmen) காலமானார். தலைநகர் மாட்ரிடில் உள்ள ஒரு குடியிருப்பில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த இவரை, கடந்த செப்டம்பர் மாதம் ஒரு முதலீட்டு நிறுவனம் வாடகையை உயர்த்தியதன் காரணமாக வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றியது. இந்த அநீதி நாடு தழுவிய அளவில் மக்களின் வீடற்ற நிலையை பிரதிபலித்ததால், பெரும் கோபத்தை ஏற்படுத்தி ஸ்பெயின் முழுவதும் தீவிர மக்கள் போராட்டமாக வெடித்தது

தற்போது ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள கடுமையான வீட்டுப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டையால் அரசாங்கத்தின் வீட்டு வசதி முன்மொழிவுகள் தோல்வியடைந்தன. இதனால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டில் முன்கூட்டியே தேர்தலை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இத்தகைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Advertisement

இந்தத் தொடர் போராட்டக் களத்தில் தள்ளாத வயதிலும் மக்களுடன் இணைந்து மரியா கார்மெனும் பங்கேற்று போராடினார். மாட்ரிடில் நடந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கலைக்க முயன்ற போது மரியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். சாதாரண விளிம்புநிலை பெண்ணாக இருந்து நாட்டின் பெரும் புரட்சியின் சின்னமாக மாறிய அவரது மறைவு ஸ்பெயின் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in