VIDEOS
செம மாஸ்.. விஷாலின் கெரியரில் வேற லெவலில் வசூல் செய்து சாதனை படைத்த மார்க் ஆண்டனி திரைப்படம்… விஷால் வெளியிட்ட வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியாகி உள்ள நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவல் கதையை இந்த படம் கொண்டுள்ளது. அனைவருக்கும் புரியும்படி ஆதிக் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஷாலும் எஸ்.கே. சூர்யாவும் இந்த படத்தில் டூயல் ரோல் பண்ணி உள்ளனர். சுனில், செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படம் விஷாலின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் வசூல் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் இறுதியில் 15 கோடிக்கு மேல் வசூல் செய்து மார்க் ஆண்டனி திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. இதனை விஷாலின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thank You Very Much Everyone, God Bless pic.twitter.com/LnXb76qcSI
— Vishal (@VishalKOfficial) September 16, 2023