60 வயசுல இரண்டாம் திருமணம்.. லவ் மேரேஜ்னு மகன் கிட்ட சொன்னப்போ.. முதல் முறையாக மனம் திறந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி..!! - Cinefeeds
Connect with us

VIDEOS

60 வயசுல இரண்டாம் திருமணம்.. லவ் மேரேஜ்னு மகன் கிட்ட சொன்னப்போ.. முதல் முறையாக மனம் திறந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி..!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகராக திகழ்ந்தார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவிற்கு நிகராக சண்டையிட்டு மக்கள் மத்தியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவ்வாறு கில்லி, பாபா, பகவதி மற்றும் ஏழுமலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடன கலைஞர் ராஜோஷி பருவாவை ஏற்கனவே திருமணம் செய்த நிலையில் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் ரூபாலி பருவா என்பவரை சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அறுபது வயதில் இவருக்கு இரண்டாவது திருமணம் தேவையா என பலரும் விமர்சித்தனர்.

தன்னைவிட 10 வயது குறைவான பெண்ணை 60 வயதில் இவர் திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து அவர் சமீபத்தில் தனது மனைவியுடன் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.