VIDEOS
விஜய் தம்பி லியோ படம் பார்த்துட்டாரு, அவர் கொடுத்த ரியாக்ஷன் இது தான்.. இயக்குனர் மிஷ்கின் பேட்டி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் விஜயுடன் அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் லியோ பட இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் லியோ பட இரண்டாவது சிங்கிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும் அதில் காஷ்மீரில் சூட்டிங் செய்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் திரைப்படம் குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசினார். அப்போது நடிகர் விஜய் தம்பி லியோ படம் பார்த்துள்ளார்.
படம் அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி லியோ பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என தெரிவித்த அவர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு என்னை மாற்ற வைக்காதீர்கள் என்று கூறினார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க