LATEST NEWS
“அடப்பாவிகளா.. ஒரு குப்பை காகிதத்துக்கா..?” ரத்தவெள்ளத்தில் தாய் , பிள்ளைகள்.. அண்டை வீட்டாரின் அராஜகம் நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தின் கப்தாங்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டின் வெளியே வீசப்பட்ட ஒரு சிறிய குப்பை காகிதம் காரணமாக ஏற்பட்ட அண்டை வீட்டுத் தகராறில், பெண் மற்றும் அவரது பிள்ளைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரிதா குப்தா என்ற பெண்மணி தனது வீட்டின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, பலத்த காற்றின் காரணமாக ஒரு சிறிய குப்பை காகிதம் தற்செயலாக அண்டை வீட்டாரின் பகுதிக்கு பறந்து சென்று விழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அண்டை வீட்டார், சரிதா குப்தாவிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அற்பமான குப்பை காகித விவகாரத்தால் ஏற்பட்ட வாக்குவாதம் சில நிமிடங்களில் வன்முறையாக மாறியது. இதனால் கடும் கோபமடைந்த அண்டை வீட்டார், சரிதா குப்தாவையும் அவரது பிள்ளைகளையும் இரக்கமின்றி அசுரத்தனமாகச் சரமாரியாக அடித்துத் துவைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப் பெண், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டியும், தங்களைத் தாக்கிய அண்டை வீட்டார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் கப்தாங்கஞ்ச் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
