CRIME
ச்சே..! இவளெல்லாம் ஒரு தாயா..? இன்ஸ்டாகிராமை அழித்ததால்.. 6 வயது பச்சிளம் குழந்தையை மரக்கட்டையால் அடித்து கொடூரம்..!!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரைப் பிரிந்து, தன் பெண் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், விஷ்ணு என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். விஷ்ணு வேலைக்குச் சென்ற பிறகு ஷோபா வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருந்ததால், தனது 6 வயது பெண் குழந்தையைக் கூட கவனிக்க நேரமில்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9-ம்தேதி மதியம் தாயின் செல்போனை எடுத்து விளையாடிய சிறுமி, விளையாட்டுத்தனமாகப் போனில் இருந்த வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற செயலிகளை நீக்கிவிட்டாள். இதனால் ஆத்திரமடைந்த ஷோபா, தனது குழந்தையை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கித் தரையில் தூக்கி வீசியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுமியின் தலை, முகம் உட்பட உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில், தனது மகள் கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகக் கூறி ஷோபா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், சந்தேகம் அடைந்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தாய் ஷோபா குழந்தையைத் தாக்கியது அம்பலமானது; இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
