இசைஞானி காலில் விழுந்து ஆசி வாங்கிய தேசிய விருது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்… வைரலாகும் வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

இசைஞானி காலில் விழுந்து ஆசி வாங்கிய தேசிய விருது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்… வைரலாகும் வீடியோ…

Published

on

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் திரைக்கலைஞர்களுக்கு தேசிய  விருதை அறிவித்தார்.இந்நிலையில் நாட்டின் 69ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல்முறையாக தெலுங்கில் தேசிய விருதை பெற்ற முதல் நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார். அதே போல அந்த படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த பாடல் இசைக்கான விருதளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய விருது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளார். இளையராஜாவை அவரின் ஸ்டுடியோவில் சந்தித்த தேவி ஸ்ரீ பிரசாத், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதுதொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nikil Murukan (@onlynikil)