“உலகின் சிறந்த தாய் நயன்தாரா”…. குழந்தைகளுக்கு பெயர் வைப்பு புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உலகின் சிறந்த தாய் நயன்தாரா”…. குழந்தைகளுக்கு பெயர் வைப்பு புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Advertisement

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த வருடம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர்.

Advertisement

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு முறைப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

Advertisement

இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தங்கள் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா தனது மகன்களின் முழு பெயரை அறிவித்துள்ளார்.

Advertisement

அதாவது உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தனது இரண்டு மகன்களின் பெயரையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது மகன்களை அரவணைத்து சூரியனையும் கடலையும் ரசிக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

அந்த பதிவில் குழந்தைகளின் பெயரில் இருக்கும் N என்ற வார்த்தை உலகின் சிறந்த தாய் நயன்தாரா என்பதை குறிக்கும் என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in