CINEMA
கமல் பிக்பாஸிலிருந்து விலகியதற்கு இவர் தான் காரணமா…? கடுமையாக விளாசும் நெட்டிசன்ஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் எட்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசன் ஆரம்பித்த நாளிலிருந்து கடந்த வருடம் முடிந்த ஏழாவது சீசன் வரை நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார். ஆனால் இவரை மேலும் பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.
இந்த நிகழ்ச்சியில் வரும் பிரச்சனைகளுக்கு மிகவும் சுமூகமாக முடிவெடுத்து தீர்த்து வைப்பார். ஆனால் கடந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி போட்டியாளராக கலந்து கொண்ட கலந்து கொண்டார். இந்த விஷயத்தில் கமலஹாசன் நீதி தவறிவிட்டார் என்று தற்போது ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். சக போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது கமல் தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பிக்பாஸில் கலந்து கொள்ள முடியவில்லை என்று அறிவித்துவிட்டார். பிக் பாஸில் இருந்து வெளியேறினாலும் ரசிகர்கள் கூறுவது பிரதிப் பிரச்சினையினால் தான் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.