CINEMA
“கங்குவா” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…. குஷியில் சூர்யா ரசிகர்கள்….!!!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.