CINEMA
தமிழ் திரையுலகில் இதுவே முதல்முறை…. செப்டம்பர்-5 இல் சம்பவம் இருக்கு…. ஒரே கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!

நடிகர் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “த கோட்”. பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட குழு நேற்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திரைப்படம் imax தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் குறித்த மேலும் ஒரு சுவாரசியமான அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தில் வெளியாகும் நாள் அன்று தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் கோட் திரைப்படம் மட்டுமே ஓடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள்.