நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பழமொழிகளில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் சாங் என்ற பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாடல் விருதை வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் இந்த விருதை வாங்கினர்.

இந்த மகிழ்ச்சியை பட குழுவினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் நடனமாடி அசத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.