நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பழமொழிகளில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் சாங் என்ற பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாடல் விருதை வென்றுள்ளது.
இந்த பாடலை இசை அமைத்த கீரவாணிக்கு பல பிரபலங்களும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபுதேவா மற்றும் அவரின் நடன குழுவினர்கள் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
NAATU NAATU ❤️❤️❤️❤️❤️to the TEAM 🙏 pic.twitter.com/g58cQlubCp
— Prabhudheva (@PDdancing) March 18, 2023