10 நாளில் தீர்வு கிடைத்தது அதிகாலையில் …. பிரியங்கா கொலைவழக்கில்…? கமிஷ்னர் சஜ்னாருக்கு குவியும் பாராட்டு …. - cinefeeds
Connect with us

TRENDING

10 நாளில் தீர்வு கிடைத்தது அதிகாலையில் …. பிரியங்கா கொலைவழக்கில்…? கமிஷ்னர் சஜ்னாருக்கு குவியும் பாராட்டு ….

Published

on

இந்திய அரசு இந்த ஒரு கொலை வழக்கில் தன் சீக்கிரமாக மிக சரியான முடிவு எடுத்து செயல்பட்டது .ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரை இன்று அதிகாலை 3.30 மணிக்கும் பொலிசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் நாடே மகிழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . இதனால் பொதுமக்கள் கமிஷ்னர் சஜ்னாரை பாராட்டி வருகின்றனர் . இது மட்டும்அல்லாது பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினர் என் மகள் ஆத்ம இப்பொழுதுதான் சாந்தி அடையும் என்ற ஆனந்த கண்ணீர் மல்க கமிஷ்னர் சஜ்னாருக்கு நின்றி தெரிவித்து உள்ளனர்.

ஹைதராபாத்தில் கடந்த 27ம் தேதி கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 குற்றவாளிகள் முகமது ஆரிப்(26), சிவா(20), நவீன்(20), கேஷ்வலு(20) கைது செய்தனர். கமிஷ்னர் சஜ்னார் கொடுத்த உத்தரவின் பெயரில் தனிப்படை பொலிசார் நேற்று இரவு முழுவதும் குற்றவாளிகளிடம் தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் உடன் 6 பொலிசார் சென்றனர் அவர்கள் அங்கு தப்பி செல்லமுயன்றதால் அந்த இடத்திலேயே அவர்களை சுட்டு கொன்றனர் .

Advertisement


இதில் முக்கிய குற்றவாளி முகமது ஆரிப் கடைசியாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நான்கு பேரின் நெற்றியிலும், அடிவயிற்றுப் பகுதியிலும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு போலீசாருக்கு சிறிய காயம் ஏற்பட்டது .என்கவுண்டருக்கு உத்தரவு கொடுத்த கமிஷ்னர் சஜ்னார் மக்கள் பாராட்டி வருகின்றனர்.இந்த சம்பவத்தை குறித்து பொது மக்கள் நங்கள் நடத்திய போராட்டத்துக்கு பலன் கிடைத்து விட்டது அரசு ப்ரியங்காவின் கொலைக்கு சரியான தீர்ப்பு வழங்கி விட்டது எங்கள் போராட்டத்திற்கும் நியாயம் கிடைத்தது என்ற மகிழிச்சியில் உள்ளனர்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in