“முஸ்கானுக்குத் தூக்கு கிடைச்சாச்சு… அப்போ சோனமின் கதி என்ன..?” சௌரப் வழக்கின் தீர்ப்பு தந்த அதிர்ச்சியில் கதறும் மற்றொரு தாயின் குரல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“முஸ்கானுக்குத் தூக்கு கிடைச்சாச்சு… அப்போ சோனமின் கதி என்ன..?” சௌரப் வழக்கின் தீர்ப்பு தந்த அதிர்ச்சியில் கதறும் மற்றொரு தாயின் குரல்..!!

Published

on

மீரட் நீதிமன்றம் ‘சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில்’ குற்றவாளியான மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவளது காதலன் சாஹிலுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ‘ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில்’ நீதிக்கான கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. சௌரப்பின் தாயாருக்கு நீதி கிடைத்ததைக் கண்ட ராஜா ரகுவன்ஷியின் தாய் உமா ரகுவன்ஷி, தனக்கு ஏற்பட்ட வேதனையை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். சௌரப்பின் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது போல, தன் மகன் ராஜாவைக் கொன்ற குற்றவாளியான மனைவி சோனம் ரகுவன்ஷி மற்றும் அவளது கூட்டாளிகளுக்கும் நீதிமன்றமும் நிர்வாகமும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தூர் வாசயான ராஜா ரகுவன்ஷி, தன் புதுமனைவி சோனமுடன் மேகாலயாவிற்கு தேன்நிலவு (Honeymoon) சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ரகசியமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் தேன்நிலவுப் பயணத்தின்போதே அவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட சோனம், சம்பவத்திற்குப் பின் அங்கிருந்து மாயமானார். விசாரணையில் சோனம் தன் காதலன் ராஜ் குஷ்வாஹாகவுடன் இணைந்து இந்தச் சதியைத் தீட்டியது தெரியவந்து, உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூரில் வைத்துப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement

தற்போது ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேகாலயா காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வலுவான குற்றப்பத்திரிகையில் மொத்தம் 94 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு இடைக்காலத்தில் கிடைத்த பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, இறுதி வாதங்கள் முடிவடைந்ததும் நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in