CINEMA
கொட்டும் பனிமழையில் காதல் மனைவியுடன் fun பண்ணும் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகர் சித்து… வைரலாகும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி 2’. இந்த சீரியல் ஹிந்தி சீரியல் ஒன்றின் ரீ மேக்காக ஒளிபரப்பப்பட்டது. இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சித்து. இந்த தொடரில் தனது மனைவியின் இலட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் ஒரு கணவனாக,அதே சமயம் ஒரு அண்ணனாக, அம்மாவின் பேச்சை கேட்டு நடக்கும் ஒரு மகனாக இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் இதற்கு முன்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்று சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார்.அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சித்து. இவர் தற்பொழுது தனது காதல் மனைவியுடன் கொட்டும் பனிமழையில் கொஞ்சி விளையாடிய ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram