LATEST NEWS
ஹீரோயினாக களமிறங்கும் ரட்சிதா.. அதுவும் பிரபல ஹீரோவுக்கு ஜோடியா..? இணையத்தில் வைரலான போட்டோஸ்..!!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டார். 91 நாட்கள் அங்கு இருந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது ரட்சிதாவுக்கு சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்தப் படத்தில் கன்னட பிரபல திரைப்பட நடிகரான ஜக்கேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடிப்பதில் வல்லவர். 58 வயதாகும் ஜக்கேஷ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரட்சிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.