ஒரே ஜாலிதான்..! வனிதா வீட்டில் பார்ட்டி.. யாரெல்லாம் இருக்கா தெரியுமா..? வைரலாகும் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

GALLERY

ஒரே ஜாலிதான்..! வனிதா வீட்டில் பார்ட்டி.. யாரெல்லாம் இருக்கா தெரியுமா..? வைரலாகும் போட்டோஸ்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடைசியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர் வனிதா. இவர் சீசன் 7-ல் தனது மகள் ஜோவிகாவை போட்டியாளராக அனுப்பி வைத்தார்.

Advertisement

இதே போல நிக்சன், சரவண விக்ரம் ஆகியோரும் போட்டியாளராக பங்கேற்றனர்.

பிக் பாஸ் வீட்டில் 63 நாட்கள் இருந்த நிலையில் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு சரவணன் விக்ரம், நிக்சன் ஆகியோரும் வெளியற்றப்பட்டனர்.

Advertisement

கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்கில் பூர்ணிமா 16 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டார்.

அதன் பிறகு குறைவான வாக்குகளை பெற்ற விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பூர்ணிமா சக போட்டியாளர்களை சந்தித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் வனிதா விஜயகுமார் போட்டியாளர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த பார்ட்டியில் பூர்ணிமா, நிக்சன், சரவண விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஜோவிகாவும் இருந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது bully gang என கிண்டலாக அழைக்கப்பட்ட ஜோவிகா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

Advertisement

இதனை பார்த்த மக்கள் வனிதா தான் அந்த கேங்கின் தலைவரா என கிண்டல் அடித்துள்ளனர். அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in