CINEMA
அவரோடு இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம்… ரகுவரன் குறித்து உருக்கமாக பேசிய ரோகிணி…!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 -களில் கலக்கிய நடிகர்களை நாம் மறக்க முடியாது, அந்த வரிசையில் எப்போதும் முதலில் இருக்கும் வி ல் லன் நடிகர் தான் நடிகர் ரகுவரன் அவர்கள். மேலும்,தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் ரகுவரன். பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.
மேலும், “பாட்ஷா” படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடி க ட்டிப் ப ற ந்து வந்தார் நடிகர் ரகுவரன். இதன்பின், நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த, நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ரோகிணி, நானும் ரகுவரனும் பிரிந்த பின்பும் நண்பர்களாக பேசி கொண்டு இருந்தோம். அவர் இறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டேன். அவரோடு இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் இன்று வரை என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.