ரகுவரன் கன்னம் சிவக்க பளார் விட்ட பிரபல நடிகை….. படப்பிடிப்பில் அரங்கேறிய சம்பவம்…. இது எப்போ நடந்துச்சு?….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரகுவரன் கன்னம் சிவக்க பளார் விட்ட பிரபல நடிகை….. படப்பிடிப்பில் அரங்கேறிய சம்பவம்…. இது எப்போ நடந்துச்சு?….!!!!

Published

on

ரகுவரன் இவரை சினிமாவில் வில்லனாக நாம் நிறையவே பார்த்துள்ளோம். 1982 ஆம் ஆண்டில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர் நிறைய தமிழ் படத்தில் நடித்திருந்தாலும், பிற மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் தொடர்ந்து பிஸியாக வலம் வந்தார். ஹீரோவைக் காட்டிலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவரை அதிக அளவில் ரசிக்க தொடங்கியதால் அதில் அதிக ஈடுபாடு கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வந்தார்.

அப்படி இருக்கும் ரகுவரனை ஒருவர் படப்பிடிப்பில் அறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது என் வழி தனி வழி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார் ரகுவரன். இந்த படத்தை வீ அழகப்பன் இயக்கினார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நிஷாந்தி என்பவர் நடித்திருந்தார். ரகுவரனுக்கு அக்காவாக கீதா நடித்தார். இப்படத்தில் ரகுவரன் வக்கீலாக நல்லவர்களுக்கு மட்டும் வாதாடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரின் வீட்டு மொட்டை மாடியில் வழக்கு தொடர்பாக அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

Advertisement

அப்போது கீதா ரகுவரனை அடிக்க வேண்டும். சினிமாவில் அடிப்பது என்பது சாதாரணமாக அடிப்பார்கள். ஆனால் படத்தின் இயக்குனர் இதெல்லாம் சாதாரணமாக அடிக்க கூடாது பளார் என்று அரை விடுங்கள் என்று கூற ஒரு கட்டத்தில் கீதா நிஜமாகவே ரகுவரனை ஓங்கி அறைந்து விட்டாராம். இதனால் அவரது கன்னம் சிவந்துவிட்டதாம். இந்த காட்சியும் ஓகே ஆனது. அதன் பிறகு இதை நினைத்து கீதா வருந்தியுள்ளார். பின்னர் இயக்குனர் இதெல்லாம் படத்திற்காக தான் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அவர் எதுவும் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார் என்று கூறி சமாதானப்படுத்தினாராம். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in