LATEST NEWS
பிரபல இயக்குனரை ரகசியமாக திருமணம் முடித்தாரா சாய்பல்லவி?.. உண்மையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுநல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதுவும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகன் ஜூனைத் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பாலிவுட்டில் எஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜுனைத் கான் தன்னுடைய முதல் படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சாய்பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்த புகைப்படம் வைரலான நிலையில் உண்மையில் அது SK 21 திரைப்படத்தின் பூஜை படங்கள் என்பது தெரிய வந்துள்ளது.
The picture that is circulating on social media platforms is from Saipallavi’s new movie #SK21 POOJA OPENING CEREMONY PIC!#SaiPallavi @Sai_Pallavi92 pic.twitter.com/N8SWTiojCA
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) September 20, 2023