LATEST NEWS
உடல்நிலை மோசமான நிலையில் சமந்தா…. உண்மை நிலவரம் என்ன?….. சற்றுமுன் வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது படம் வெளியான 10 நாட்களில் இந்த திரைப்படம் உலக அளவில் 33 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இதனிடையே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா சில மாதங்களாக மையோ சிடிஸ் என்று அறிய வகை நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அதிலிருந்து குணமடைந்து வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் அந்த பேட்டியில் கண்ணீர் விட்டு அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அவரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இருந்தாலும் சமந்தா தரப்பில் இருந்து இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த செய்தியை சமந்தாவின் மேலாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார். சமந்தா தன்னுடைய வீட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் என் உடல்நிலை குறித்து இணையத்தில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.