CINEMA
நான் 15 வயசுல, வீட்ல யார்ட்டையும் சொல்லாம…. நல்லவங்க இருக்காங்க…. சமுத்திரக்கனி நெகிழ்ச்சி…!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள். இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை கொண்ட படமாக தான் இருக்கும். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய படங்களில் நிறைய நல்லவர்கள் இருப்பது குறித்து சமுத்திரக்கனி மனம் திறந்துள்ளார்.
அதாவது, நான் 15 வயசுல, வீட்ல யார்ட்டையும் சொல்லாம சென்னை ஓடி வந்துட்டேன். ஒரு பாட்டி காசு வாங்காம எனக்கு இட்லி குடுத்தாங்க. அரை டவுசரோடு அண்ணா மேம்பாலத்துக்கு கீழ படுத்து கிடந்தேன். இதை பார்த்த ஒரு போலீஸ் ஸ்டேஷனில் படுக்க வச்சாரு. இது போன்ற நல்லவங்களாலத்தான் பூமியே இயங்கிக்கிட்டு இருக்கு என்றார்.