CINEMA
அடக்கடவுளே…! முதல் நாளே கண்ணீரோடு வெளியேறிய போட்டியாளர்…. இது நியாயமா…??

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என விஜய்சேதுபதி தெரிவித்திருந்த நிலையில், எவிக்சனில் அதிக நாமினேஷன்களைப் பெற்ற சாச்சனா வீட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறியுள்ளார். இதனால் தற்போது வீட்டில் 17 போட்டியாளர்கள் உள்ளனர்