CINEMA
திருவாசகம் பாட்டு கேட்டா என்ன ஆகும் தெரியுமா….? தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்த நடிகர் சந்தானம்…!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர்தான் நடிகர் சந்தானம். தமிழ் சினிமாவில் முதலில் சில நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சந்தானம் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தினமும் சாமி கும்பிடுகிறோமோ இல்லையோ, கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ காலை எழுந்ததும் ஒரு 10 நிமிடம் கண்ணை மூடிவிட்டு திருவாசகம் கேட்டால் போதும். அந்த மாணிக்க வாசகரே தெரிவார் அதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.