“அடச்சீ.. கோமா நிலையிலும் விடாத கொடூர மனம்..!” தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்து 12 வயது சிறுமியை கேலி செய்த மாணவிகள்… திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ.. கோமா நிலையிலும் விடாத கொடூர மனம்..!” தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்து 12 வயது சிறுமியை கேலி செய்த மாணவிகள்… திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

பள்ளி மாணவிகளின் தொடர் கொடுமை மற்றும் மிரட்டல்களால் தற்கொலைக்கு முயன்ற 12 வயது சிறுமி, மருத்துவமனையில் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, துன்புறுத்தல்செய்த மாணவிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் கேலி செய்த அதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மார்ச் 2023-இல், கெலாயா டர்னர் என்ற சிறுமி பள்ளியில் ஏற்பட்ட தொடர் கொடுமைகள் காரணமாகத் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். தற்கொலை முயற்சியின் போது சுமார் 8 நிமிடங்கள் இதயம் நின்ற நிலையில், மருத்துவர்கள் அவரை மீட்ட போதிலும், அவரது மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

அவர் மருத்துவமனையில் மயக்க நிலையில் இருந்தபோது, துன்புறுத்தல் செய்த மாணவி ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, கோமாவில் இருந்த கெலாயாவை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து மீண்டும் கொடூரமாகக் கேலி செய்துள்ளார். இந்த அநாகரீகமான செயலால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், 2024-ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முறைப்படி காவல்துறையில் புகார் அளித்தனர். கெலாயா இந்தத் தற்கொலை முயற்சியில் இருந்து உயிர் பிழைத்த போதிலும், மூளை பாதிப்பு காரணமாகத் தற்போது கடுமையான உடல் ஊனத்துடன் வாழ்நாள் முழுவதும் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in