“என்னைத் தொட்டு காட்டு..” டீச்சரால் பாலியல் தொல்லை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மிரட்டிய நிர்வாகம்..! பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னைத் தொட்டு காட்டு..” டீச்சரால் பாலியல் தொல்லை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மிரட்டிய நிர்வாகம்..! பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!!

Published

on

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில், 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி தனது ஆசிரியர் மீது தவறான முறையில் தொட்டதாகவும், பள்ளி இயக்குநர் மீது அவதூறான மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் பேசியதாகவும் தீவிர புகார்களை எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவியின் இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியில், முறையான நடவடிக்கை எடுக்காமல் பள்ளி நிர்வாகம் தரப்பில் தங்களை மிரட்டி அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயாரின் புகாரின்படி, கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று இந்தச் சம்பவம் குறித்து பள்ளியில் முறையான புகார் அளிக்கப்பட்டது. அப்போது ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்திருந்த போதிலும், அடுத்த நாளே (அக்டோபர் 16) பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் இயக்குநர் தரப்பிலிருந்து மிகவும் அநாகரிகமான முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் மற்ற மாணவிகளுக்கும் இதுபோன்ற தவறான பாலியல் தொல்லைகள் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று மாணவி தனது வீடியோவில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு டேராடூனின் எஸ்.எஸ்.பி பிரமேந்திர டோபால் உடனடியாக விசாராணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவரை காவல்துறைக்கு முறையான எழுத்துபூர்வமான புகார் வரப்பெறவில்லை என்றாலும், இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு விசாரணை ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in