LATEST NEWS
சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்தாச்சு… அவரே வெளியிட்ட க்யூட் புகைப்படம்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில் நட்சத்திராவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க