LATEST NEWS
“18 வயதில் திருமணம், 19 வயதில் குழந்தை”… வாழ்க்கையே முடிந்து விட்டது… சீரியல் நடிகை ரிஹானா எமோஷனல் ஸ்பீச்..!!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரிஹானா. இவர் சன் டிவியில் ஆனந்த ராகம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சின்னத்திரையில் மிகவும் தைரியமான நடிகைகளில் இவரும் ஒருவர். அண்மையில் சீரியல் பிரபலங்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில் இவர் நடிகருக்கு ஆதரவாக பேசினார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய வாழ்க்கை குறித்து எமோஷனலாக பேசியுள்ளது வைரல் ஆகி வருகிறது. அதாவது அக்னி பறவை என்ற தொடரில் டீச்சராக நடித்து வந்தேன், அதன் பிறகு சன் டிவி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சீரியலில் நடிக்க முடியாமல் போக நான் செய்து வந்த மெஸ் வேலையை தொடர்ந்து செய்தேன்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை வந்ததால் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதனால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்தோம். 18 வயதில் திருமணம், 19 வயதில் குழந்தை,24 வயதில் இன்னொரு குழந்தை என இப்படி திரும்பி பார்ப்பதற்குள் என் வாழ்க்கையை எல்லாமே முடிந்துவிட்டது என்று அவர் எமோஷனலாக பேசியுள்ளார்.