LATEST NEWS
ஐயோ இந்த அழகுக்கு மொத்த சொத்தையும் வாரி கொடுக்கலாம் போலையே.. சேலையில் ரசிகர்களை கவரும் சீரியல் நடிகை சரண்யா..!!

ஆயுத எழுத்து சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சின்னத்திரை நடிகை சரண்யா. அந்த சீரியலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி சரண்யா பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலிலும் ஹீரோயினியாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து டிவிகே சென்ற பிறகு மீண்டும் திரும்பி விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் நடித்தார். செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்த சரண்யாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதனை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரையில் படிப்படியாக முன்னேறினார். அதே சமயம் தன்னுடைய நடிப்புத் திறமையால் ஏராளமான ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
இவர் கல்லூரி படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரிடம் மனதை பறிகொடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவரின் கணவர் லண்டனில் வசித்தாலும் சென்னையில் குடியேறிய சரண்யா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகின்றார்.
இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா தற்போது சேலையில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.